ஆசிரியர், அதிபர் போராட்டத்தில், வடக்கு, கிழக்கு ஆசிரியர் அதிபர்களை முதன்மைப்படுத்தி, தென்னிலங்கையில் இந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான பிரசாரத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
All Stories
விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய 12 பில்லியன் ரூபா (1200) கோடி) ரூபா பணத்தை வழங்காமல் சுகாதார அமைச்சு காலம் தாழ்த்துவதால் எதிர்காலத்தில் பல சுகாதார சேவைகள் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கம் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம் என்று இலங்கை தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டுக்குள் நுழையும் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுப் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதில்லை என்ற தீர்மானமானது எந்தவித விஞ்ஞானரீதியான அடிப்படை எதுவும் அற்ற தீர்மானமாகும் என்று சுகாதார தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தடை காணரமாக 30,000 இற்கும் மேற்பட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர் என்று தனியார் பஸ் உரிமையாள்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில், சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வருமாறு...
யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமல்போயிருந்த நிலையில்இ இரண்டு நாட்களின் பின்னர் நேற்று நவாலியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தங்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிடின் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க ஒன்றியம் எச்சரித்துள்ளது.
ஆசிரியர் தினமான நாளை (06) வலயக் கல்வி காரியாலயங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பொது சேவைகளை வழமைபோல முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், ரயில் சேவைகள் எதிர்வரும் 2 வாரங்களுக்கு முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.