போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை
தங்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிடின் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க ஒன்றியம் எச்சரித்துள்ளது.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தவிற்கு அனுப்பியுள்ளதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அது குறித்து உரிய நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
கிராம உத்தியோகத்தர் சேவையை தனியான சேவையாக ஸ்தாபித்தல், சுமார் 17 ஆண்டுகளாக நீடிக்கும் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அவர்கள் அந்த கடிதத்தில் கோரியுள்ளனர்