அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (23) இடம்பெற்றது.
All Stories
வயதெல்லை காரணமாக தொழில் இல்லாமல் போன சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பைக்கோரி கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமன கடிதத்தில் நியமனத் திகதி 2021 ஜனவரி முதலாம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் சுகாதார நிலைமை காரணமாக பட்டதாரி பயிலுநர்களை நேரில் அழைத்து தகுதிகாண் பரீட்சை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. எனினும் இச்செயற்பாட்டை விரைவில் நிறைவு செய்யும் நோக்கில் பொது சேவை ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் பயிலுநர் அதிகாரிகள் அழைக்கப்படாமல் தகுதிகாண் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
குறித்த அதிகாரிகளுக்கு ஒன்லைன் ஊடாக தகுதிகாண் பரீட்சை முன்னெடுக்கப்பட்டது. ஒரு வார குறுகிய காலத்தினுல் 12,000 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அமைச்சுக்கு அனுப்பவேண்டியுள்ளது.
சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் கணனி மென்பொருளில் உள்ளடக்கப்படவுள்ளது. இந்நிலையில் ஆவணங்களில் குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை பரிசோதிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே கடந்த வாரம் ஒன்லைன் மற்றும் தொலைபேசியூடாக அதிகாரிகள் பட்டதாரி பயிலுநர்களை தொடர்புகொண்டு தகவல் பெற்று வருகின்றனர். (மிக அவசிய தேவை கருதியே குறித்த தொடர்புகள் ஏற்படுத்திக்கின்றமையை கருத்திற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.)
2018 ஆம் ஆண்டு பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளை உடனடியாக நிரந்தர சேவையில் இணைக்குமாறு கோரி இம்மாதம் 24ம் திகதி போராட்டமொன்றை நடத்த ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பட்டதாரிகள் உட்பட அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய தொழில் கௌரவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் தரத்தை மேம்படுத்துமாறு கோரி தேசிய எதிர்ப்பு போராட்டமொன்றுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அனைத்து பட்டதாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 4ம் திகதி மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக நன்பகல் 12.00 மணிக்கு இவ்வெதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவும் மாவட்டச் செயலாளர்களிடம் கையளிக்கப்படுகிறது.
வட மேல் மாகாணத்தில் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நியமனம் வழங்குமாறு கோர ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தொழிற்சங்கங்களின் பெண் அங்கத்தவர்களை வலுவூட்டல் மற்றும் அவர்களுடைய தொடர்பாடல் திறனை விருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு தின வதிவிட செயலமர்வு கடந்த 17, 18ம் திகதிகளில் வத்தளை, பெகஸஸ் ரீவ் ஹோட்டல் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தகவல் அறியும் உரிமை, ஊடகசந்திப்பொன்றை எவ்வாறு நடத்துவது மற்றும் உலக தொழிலாளர் தாபனத்தனால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான C190 பிரகடனம் போன்றவை குறித்து செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.
வளவாளர்களாக ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஜனரஞ்சன, ஊடகவியலாளர், சட்ட அதிகாரி பாக்யா வீரகோன், ஊடகவியலாளர் பிரியான் ஆர் விஜயபண்டார ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில், அரச, தனியார் துறை மற்றும் முறைசாரா தொழிற்றுறை சார் தொழிற்சங்கங்களின் பெண் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்ள தகுதியிருந்தும் 24/11/2020, 11.12.2020 மற்றும் 05.01.2021 அகிய தினங்கள் வௌியாகிய பெயர் பட்டியலில் இடம்பிடிக்காத பட்டதாரிகளை அடுத்த கட்டமாக இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அபிவிருத்தி சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளரும் பட்டதாரிகள் மத்திய நிலையத்தின் அழைப்பாளருமான சந்தன சூரியாராய்ச்சி அறிவத்துள்ளார்.
இலங்கை நிருவாக சேவை தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை 2018 (2020) யில் தோற்றி, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வௌியாகியுள்ளன.
பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சி காலத்தை ஆறு மாதங்களாக குறைத்து பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், தொடர்ந்தும் உங்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராட தயாராகவுள்ளோம் என்று அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கத்தின் செயலாளரும் பட்டதாரிகள் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளருமான சந்தன சூரியராய்ச்சி தனது முகநூல் பக்க்தில் தெரிவித்துள்ளார்.
பட்டதாரி பயிலுநர்களை தற்காலிக சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் கவனத்திற்கொள்ள விடயங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்ஜே.ஜே. ரத்னசிறி அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.