தொழிலாளர் வேலை முடிவுறுத்தலுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு 25 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
All Stories
இரண்டு மூன்று கிழமைகளில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக பொது வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இந்நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நினைத்துக்கொண்டு மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றனர். இதனால் தொற்று வேகமாக பரவும் அபாயம் தோன்றியுள்ளது என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும், எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் விடுமுறை கொண்டாட்டங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் உபுல் ரோஹன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட விடுமுறை ரத்து செய்யப்பட்டமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பேராதனை வைத்தியசாலை தாதியர் மேற்கொண்ட 5 மணி நேர வேலைநிறுத்தம் வெற்றியளித்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தினால் கடமைகளின் ஏற்பட்ட பின்னடைவையடுத்து தாதியர் சங்கத்தை சந்தித்த அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் விசேட விடுமுறை உட்பட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளனர்.
விட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலை அல்லது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாமல் கடந்த இரண்டு நாட்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மத்திய நிலையங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 27ம் திகதி தொற்றுக்குள்ளான 200 பேர் வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லப்படாமல் வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டனர் என்று பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நோயாளர்களுக்கு கடந்த 18ம் திகதி தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாதுள்ளது என்று அச்சங்கத்தின் செயலாளர் சுட்டிகாட்டியுள்ளார்.
கடந்த இரு நாட்களாக நோயாளர்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையானது மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏதுவாக அமையும். நாளொன்றுக்கு 700 நோயாளர்கள் அடையாளங்காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்நிலை தோன்றியுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளர்களை சிகிச்சை பெற சிகிச்சை நிலையங்களில் இட வசதி அவசியம் என்றும் அச்சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி இரஜாங்க அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் நாளை (08) முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தம் நடைபெறுமா இல்லையா என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட விடுமுறையை ரத்து செய்தமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) பேராதனை வைத்தியசாலை தாதியர்கள் 5 மணி நேர பணிப்பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகித்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விசேட விடுமுறைகளை ரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வத்துபிட்டிவல வைத்தியசாலை தாதியர் உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போராட்டமானது இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனமான அதானிக்கு வழங்குவதற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் காலி துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (29) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது.
நாளை (05) வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கான ரூபா 1000 சம்பள கோரிக்கைக்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு மலையக ஆசிரிய தொழிற்சங்கங்களும் தமது பூரண ஆதரவை வெளிட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக பிரச்சினை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் உப குழுவின் அறிக்கை இன்று (01) துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் தேசிய செயற்றிட்டத்தினால் வழங்கப்பட்ட முன்மொழிவு குறித்து இன்று (25) கலந்துரையாடப்படவுள்ளது என்று துறைமுக அமைச்சின் செயலாளர் யு.டி.சீ ஜயலால் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி காலப்பகுதியில் அரச சேவையில் இணைத்து்கொள்ளப்பட்டவர்களுக்கு ஓய்வூதிய உரிமை மறுக்கப்பட்டமையினால் 2016 ஆண்டு தொடக்கம் இன்று வரை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 160,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
2021.01.18ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அன்றைய நாளை சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிடுமாறு அறிவுறுத்தப்படும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் 2021.01.19 ஆம் திகதிய கடிதம் தொடர்பான நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்க பிரதானியொருவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.