பால்நிலை சமத்துவத்தை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா நேற்று (20) காலை பதுளை தபாற் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
All Stories
பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மகளீர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக அட்டன் குடாஓயா பிரதேசத்தில் இயங்கிவரும் Blessed பெண்கள் அமைப்பனால் சர்வதேச மகளிர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பிரதி பொலிஸ் மா அதிபராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார் கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கர்ப்பிணித் தாய்மார் கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டியது ஏன் ?
கர்ப்பிணியான நீங்களும், கருவிலுள்ள உங்கள் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். இதற்காக கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதியாக கடைப்பிடிப்பதும் , உரிய சுகாதார ஆலோசனைகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும்.
கர்ப்பிணித் தாய்க்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்.
சாய்சாலைக்கு(கிளினிக்) அல்லது வைத்தியசாலைக்கு செல்ல நேர்ந்தால் , கொவிட்19 நோயிலிருந்து தவிர்ப்பதற்காக கீழ்வரும் ஆலோசனைகளை உறுதியாக கடைப்பிடியுங்கள்.
1. காற்றோட்டமற்ற இடத்தில் தரித்திருப்பதை இயன்றளவு தவிர்த்தல்.
2. எப்பொழுதும் உரியவாறு முகக்கவசத்தை அணிதல்.
3. நபர்களுக்கிடையான தூரத்தை உரியவாறு பேணல்.
4. மரண உற்சவம் போன்ற சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லாதிருத்தல்.
5. எப்போதும் சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.
கொவிட் நோய்ப் பயத்தின் காரணமாக கர்ப்பிணித் தாய்மார் உரியவேளைகளில் கிளினிக்கிற்கு செல்வதிலும் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதிலும் , தாமதமாவது காணக் கிடைக்கின்றது.
இத் தாமதத்தின் காரணமாக கர்ப்பிணித் தாயினதும் கருவிலுள்ள சிசுவினதும் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.
கொவிட் ஆபத்து அதிகரிக்கும் காலத்தில் வழமையான சுகாதார சேவைகளை வழங்கப்படுவதற்கு இயலாத நிலைமை இருக்க முடியும். ஆதலால், உங்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி அவர்களை அல்லது குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை தொடர்புகொண்டு, மேற்குறித்த சேவைகளை தற்போது பெறக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் இன்றே அறிந்து கொள்ளுங்கள்.
"கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தான சமிக்கைகள் " தொடர்பில் நீங்கள் இப்போதே அறிந்திருக்கக் கூடும். மீண்டுமொருமுறை அவற்றை ஞாபகப்படுத்துவதென்றால், காய்ச்சல், குருதிப்பெருக்கு, கடுமையான தலையிடி, மூச்செடுப்பதில் கஷ்டம், பார்வைக் குறைவு , வலிப்பு, நெஞ்சில்/வயிற்றில் வேதனை, சிசுவின் துடிப்புக் குறைவு, உடல் வீக்கம், அத்துடன் வேறு ஏதாவது கடினமான அசௌகரிக நிலை ஆபத்து சமிக்கைகளாக அடையாளம் காணப்பட முடியும்.
இவ்வாறான ஆபத்தான சமிக்கை தோன்றினால் உடன் வைத்தியசாலைக்கு செல்வது கட்டாயமாகும். அது தொடர்பில் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
கர்ப்பிணியான உங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக,கொவிட் நோய்த் தொற்றிலிருந்து உங்களை தவிப்பதற்குரிய உரிய சகல ஏற்பாடுகளும் வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவசிய வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவேண்டாம்.
உங்களுடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் நோயாளி என சந்தேகிக்கப்படும் நபரொருவர் உங்கள் வீட்டில் வசித்தால் அது தொடர்பாக உடனடியாக உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முடிந்தவரை அவரிலிருந்து விலகி இருங்கள்.
தற்செயலாக, உங்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோணா நோய் அறிகுறி உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
அவசிய சிகிச்சைகளை உடனடியாகப்பெறுங்கள். வைத்தியசாலைக் கட்டமைப்பு உங்களுக்காக தயார் நிலையில்......
இச்சகல நிகழ்வுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் தோன்ற முடியும். அதை தவிர்ப்பதற்காக, மனதை எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
தேவைப்படும் எந்தநேரத்திலும் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை அல்லது 1999 சுவசெரிய தொலைபேசி சேவையினூடாக வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை தொடர்பான காரணங்களை கலந்தாலோசிக்கவும் முடியும்.
இத்தகவல்களை இலங்கையிலுள்ள சகல தாய்மாரினதும் மற்றும் எதிர்கால சிறுவர் பரம்பரையினரினதும் நல்வாழ்விற்காக பகிருமாறு நாம் உங்கள் சகலரையும் வேண்டுகிறோம்.
இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் ‘International Women of Courage‘ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிம்சானி ஜாசிங்க ஆராச்சி குறைகேள் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்ததுள்ளது
பொலிஸ் திணைக்களத்தை மீள கட்டமைக்கும் செயற்பாடுகளுக்கு அமைய பொலிஸ் மா அதிபரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், விரைவில் ஜா சிங்க ஆராச்சிக்கு வேறு ஒரு பதவி வழங்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்சானி ஜா சிங்க ஆராச்சியின் கீழ் குறித்த ஒம்பூட்ஸ்மன் பிரிவில் சேவையாற்றிய ஏனைய அதிகாரிகளையும், வேறு ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் கடமைகளை முன்னெடுக்க பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்டபெறும் அநீதி மற்றும் வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்தற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோர பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.
குவைத் பணிப்பெண் கற்பழிப்பு 8 வருட போராட்டத்திற்கு பிறகு நீதிபெற்று தாயகம் திரும்பினார்.
(ஆர். சிவானுஜா)
அட்டன், நுவரெலியா தோட்ட பகுதிகளில் எனது கால்கள் பதியாத இடங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நான் எல்லா இடங்களுக்கும் சென்று சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளேன் என்று அமெரிக்காவினால் 'தைரியமிக்க பெண்'; என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்தார்.
அட்டன்; சமூக நல நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்
இதன் போது, தைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் சர்வதேச விருதை (2021) பெற்றக் கொண்ட சட்டத்தரணி ரனிதா ஞானராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இவர் வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் கட்டாய பயங்கரவாத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தனது குடும்பத்தினருடன் இணைந்து குரல் கொடுத்ததுடன் அவர்களுக்கான இலவச சட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் முதல் பெண்மனி ஜில் பைடன் மற்றும் இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனி ஆகியோரால் சூம் தொழிநுட்பம் ஊடாக இவருக்கு 'தைரியமிக்க பெண்' விருது வழங்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தின நிகழ்வில் இவர் தொடர்ந்து உரையாற்றம் போது நான் அட்டனில் அமைந்துன்ன 'மனித உரிமைகள் இல்லம்' என்ற நிறுவனத்தில் இளம் வயது சட்டத்தரணியாக எனது பயணத்தை ஆரம்பித்தேன். இங்கு பணியாற்றிய காலத்தில் மலையக பகுதி எங்கும் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளில் எனது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளேன்.
.
மேலும் பெருந்தோட்ட பகுதிகளில் கட்டாயப்படுத்தப்பட்ட கருத்தடை மற்றும் பெண்களுக்கான பொறுப்புகள் தொடர்பான ஆய்வு மேற்கொண்டதுடன் அந்த பெண்களுக்கான தெளிவினையும் பெற்றக் கொடுத்துள்ளேன். இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் மலையக மக்களுடன் நான் பணியாற்றி உள்ளதுடன் தொடர்ந்தும் எனது பணி மலையகத்தில் இடம் பெறும் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
மேலும் மலையக பெண்களே உங்களை நீங்கள் கல்வி ரீதியாக கட்டி எழுப்பி கொள்ளுங்கள். அன்னையார்களான நீங்கள் எதிர்கால சந்ததியின் கல்வியை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளீர்கள் அதனை செவ்வனே செய்யுங்கள். கல்வி என்பது கட்டி எழுப்பப்டுமானால் குடும்ப வன்முறை தடுக்கப்படுவதுடன் சமூக அந்தஸ்து உயர்வு இயல்பாக நடைபெறும் என்பதால் மலையக பெண்களின் கல்வி என்பது மிக மிக அவசியமான ஒன்றாக கருதப்பட்டு அதற்கு தங்களின் முழுமையான கவனத்தை செலுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார்.