விரைவில் தொழிற்சங்க நடவடிக்கை- எச்சரிக்கும் GMOA

விரைவில் தொழிற்சங்க நடவடிக்கை- எச்சரிக்கும் GMOA

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

​வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தன்னிச்சையான தீர்மானம் உட்பட 4 கோரிக்கைகள் முன்வைத்து இத்தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

துறைசார் அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல்லவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பிலான தீர்மானம் இம்மாதம் 7ம் திகதி தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தரநிலை வைத்திய அதிகாிகளின் வருடாந்த இடமாற்றம் பட்டியல் செல்லுபடியாகும் திகதி
கடினமான நிலையப் பட்டியல் தொடர்பான சிக்கல்கள்
வேலைவாய்ப்பு நியமனத்தில் தாமதம்
வேலைவாய்ப்புக்கு பிந்தைய நியமனங்களில் தாமதம் ஆகிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இத்தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image