பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்கை செலவுகள் குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
All Stories
53,000 பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரிகளுக்கு நிரந்த நியமனம் வழங்க அரசாங்கத்தினால், உரிய வேலைத்திட்டதை முன்வைக்க இதுவரையில் முடியாமல்போயுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி நியமனத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம், அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் மகஜர் ஒன்று நேற்று (21) கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40 சுகாதார தொழிற்சங்கங்களால் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார பரிசோதர்களுக்கு வழங்கப்படுவது போன்று கிராமசேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான செயன்முறையினை சிபார்சு செய்யும் நோக்கில் கொவிட் 19 தடுக்கும் ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து தொழில்நுட்ப குழுவொன்றை ஸ்தாபித்துள்ளதாகவும், குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கமைவாக எதிர்வரும் காலங்களில் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கிலே இந்த 5000 கொடுப்பனவை ஆசிரியர்கள்,அதிபர்கள் பெறுகிறார்கள் என்ற மாயை தோற்றத்தை உருவாக்கி தென்னிலங்கையிலே ஒரு இனவாதத்தை தூண்டும் வகையிலே அரசு செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.
இந்த (2021) வருடத்திற்கான கடன் எல்லை மேலும் 400 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கபடவுள்ளது.
பொதுநவாய பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் நியூயோர்க்கில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றில், பொதுநவாய நாடுகளுடனான பேச்சுவார்த்தை மற்றும் ஈடுபாட்டிற்கான இலங்கையின் செயலுறுதிப்பாட்டை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.