பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்.
All Stories
நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிக்குமாறு ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையால், மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு அதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உயர்தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்டு தற்போது பயிற்சி பெறும் பட்டதாரிகள் 53,000 பேருக்கு மூன்று மாத காலத்திற்குள் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று அமைச்சரவை பேச்சாளர், ஊடக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
அழகியல் பாடங்களின் செயன்முறை பரீட்சை நடத்தாமல் க.பொ.த சாதாரண தர பரீட்சை (2020) பெறுபேறுகளை வௌியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எமது சம்பள போராட்டமானது சம்பள அதிகரிப்பிற்கானதல்ல, சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கானது என்று முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச சேவைகளில் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனத்தை விரைவாக வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழு பட்டதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வது அவசியம் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் நிலையம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் சிற்றுண்டிசாலைகளை நடத்துபவர்கள், பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஏனைய சிற்றூழியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களில் சுமார் 25 000 பேர் இன்னமும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5 % வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததார்.
வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்தல் திட்டம் 2020 இன் கீழ் பயிலுநர்களுக்கான பயிற்சி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன
நாடுபூராகவுமுள்ள சகல பாடசாலைகளையும் திறப்பதற்கான வழிக்காட்டல் அறிக்கையை