தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அது தொடர்பாக தொழில் திணைக்களத்திற்கு முறையிடுவதற்கான விண்ணப்பப்படிவம் தொடர்பில் பலரும் அறிந்திருப்பதில்லை.
All Stories
வேலைத்தளத்தில் ஊழியர்கள் பெரும்பாலும் தொழிலாளர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது பொதுவான நிலையாக இருக்கின்ற நிலையில், ஏதாவது ஒரு வகையில் தொழில் சட்டம் மற்றும் நிவாரணத்தை பெற்றுக் கொள்ளும் முறைமை தொடர்பில் அறிந்திராதமையினால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு உரித்தான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைகளும் உள்ளன.
தனியார்துறையில் பணியாற்றும் ஒருவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக எதிர்நோக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது பணிநீக்கம் செய்ய முடியுமா? தொழிலாளர் சட்டம் என்ன சொல்கிறது? இது எம்மில் பலருக்கு உள்ள கேள்வி. அது தொடர்பான விபரங்களை விரிவாக எமக்கு வழங்குகிறார் சட்டத்தரணி திரு மோகனதாஸ்.