பணியை விட்டு சென்றுள்ள சுமார் 30,000 தனியார் பஸ் ஊழியர்கள்

பணியை விட்டு சென்றுள்ள சுமார் 30,000 தனியார் பஸ் ஊழியர்கள்

நாட்டில் அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தடை காணரமாக 30,000 இற்கும் மேற்பட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர் என்று தனியார் பஸ் உரிமையாள்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு மாதம் எவ்வித போக்குவரத்து இன்மை காணரமாக சுமார் 75 வீதமான தனியார் பஸ்கள் வீதியில் பயணிக்க முடியாது போயுள்ளது. இதனால் தமது வருமானத்தை இழந்த சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள் வருமானத்திற்கு மாற்று வழிகளை தேடிச் சென்றுள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு அரச நிவாரணங்கள் கிடைக்கவில்லை. அவரவருக்கான வருமானத்தை அவர்களே தேடிக்கொண்டுள்ளனர்.

போக்குவரத்துத் தடை நீக்கப்பட்ட பின்னர் சேவையை ஆரம்பித்துள்ள பஸ்களை வாகன உரிமையாளர்களே செலுத்துகின்றனர்.

"நாடு மீண்டும் பூட்டப்பட்ட நிலைக்குச் சென்றால் தங்கள் கதி என்னவாகும் என்று பேருந்து நடத்துபவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டுள்ளனர்" என்று திரு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Notwithstanding that several buses are back on the roads after the reopening of the country are driven and managed by the owners.

தற்போது சேவைக்கு ஈடுபடுத்தப்படவேண்டிய பஸ்களை திருத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. சுமார் 5000 பஸ்களை திருத்த 50,000 ரூபாவும் சுமார் 10,000 பஸ்களை திருத்த ஒரு இலட்சம் ரூபா வரையிலும் தேவைப்படுகிறது. எவ்வித வருமானமுமின்றி தற்போது சேவைக்காக வீதியில் இறங்கவுள்ள பஸ்களை திருத்த அவ்வளவு பணத்துக்கு எங்கே செல்வது என்றும் விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் அரசாங்கம் கோருவது போன்று சேவை வழங்குவது சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெய்லி மிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image