சில அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
All Stories
நுவரெலியா - ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் பலவீனம் காரணமாகவே கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்ல முடியாமல் போனதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
2012ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைக்கப்பட்டு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் தகவல்களை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின், கட்டாய ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சினால் நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல், இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாகவும், வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1934 ஆம் ஆண்டு 5 ஆந் திகதி வெளியிடப்பட்ட ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 51 ஆம் பிரிவின் திருத்தப்பட்டவாறான 1948 ஆம் ஆண்டின் 13 ஆம் ஓய்வூதிய கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் அறிவிததல்.
காலத்திற்குக் காலம் திருத்தப்பட்ட ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 17 ஆம் ஏற்பாடுகளின் கீழ் 2021.07.08 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2235/60 இல் குறிபபிடப்பட்டுள்ள ஒவ்வொரு பதவிக்கும் உரிய கட்டாய ஓய்வூதிய வயதெல்லை திருத்தம் செய்யும் அட்டவணையில் தற்போது உள்ள பதவிகளுக்கு மேலதிகமாக குறித்த பதவியையும் சேர்த்து மேலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் ஜே. ஐ. டி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொடுக்க தயார் என்று கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் சுகாதார விதிமுறைகளை சரியான பின்பற்ற தவறியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.