ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியைச் சார்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவின் பிரதமராக தெரிவாகியுள்ளார்.
All Stories
கனடாவில் 13 பேருக்குக் குரங்கு அம்மை தொற்றியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Al Jazeera செய்தி நிறுவனத்தின் மூத்த பெண் செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே (Shireen Abu Aqleh), பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த படகு கரீபியின் தீவுக் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுமார் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
வீட்டுப் பணிப்பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்து தண்டனை வழங்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணின் மேன்முறையீட்டுக் கோரிக்கையை சிங்கப்பூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்திலிருந்து சுமார் 6 வார காலத்திற்குள் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் தமது வீடுகளை விட்டு வௌியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது.
இந்தியத் தலைநகர் டெல்லியின் முண்ட்காவில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 27 பேர் இறந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்தியாவின் மும்பையில் ’XE’ என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது.
கடுமையான மாதவிலக்கு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு மருத்துவ விடுப்பை அறிமுகப்படுத்த ஸ்பெயின் திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, 4,000 மைல்கள் தொலைவிலுள்ள ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான ஒப்பந்தத்தை முதல் முறையாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுடன் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் நிலையில், அவர்கள் ருவாண்டாவில் தங்க வைப்பது தொடர்பான ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் கையெழுத்திடவுள்ளார்.
இவை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் பயத்தை ஏற்படுத்தும் என்றும் பிரித்தானிய அதிகாரிகள் நம்புகின்றனர்
சிங்கப்பூரில் பணியாற்றும் ஊழியர்களில் 8 வீதமானவர்கள் இவ்வாண்டு பணியிட பாகுபாடுகளை எதிர்நோக்கி வருவதாக சிங்கப்பூர் மனித வள அமைச்சின் மனிதவள மற்றும் தொகை மதிப்பீட்டு பிரிவு ஆகியன மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.