எதிர்வரும் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொது சேவைகளை வழமைபோன்று செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷவுடன் இணையவழி காணொளி மூலம் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலில், அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்தாரென அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றுநிரூபத்தை நாளைய தினம் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.