நாடு மீண்டும் திறக்கப்படும் போது அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (29) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச நிறுவனங்களின் பிரதானிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட சில தரப்பினருடன் அண்மையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்காக தேவைப்படும் விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
குறித்த இணக்கப்பாட்டையும் உள்ளடக்கி குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைவாக, நாட்டை திறந்தவுடன் அரச ஊழியர்களை மீள சேவைக்கு அழைப்பது தொடர்பில் இன்றைய (29) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இறுதி இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம் - நியூஸ்பெஸ்ட்