குவைத்தில் சட்டவிரோத கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த உள்துறை அமைச்சர் ஷேக் தமர் அல்-அலி உத்தரவு.
All Stories
இலங்கையில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் குவைத் இலங்கை நேரடி விமானசேவைகளுக்க தடை விதித்துள்ளது.
புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து குவைத் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை நேற்று விதித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இப்புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய குவைத்தில் உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் அழகுநிலையங்களை மூடுமாறு அறிவித்துள்ளதுடன் ஏனைய வர்த்த நிலையங்களை இரவு 8.00 மணி தொடக்கம் காலை 7.00 மணி வரை ஒரு மாதத்திற்கு மூடுமாறும் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரு் 7ம திகதி வரை இத்தடையுத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளது. எனினும் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவுப்பொருள் விற்பனை நிலையங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், மண்டபங்கள் என்பவற்றையும் இரவு 8.00 மணி தொடக்கம் அதிகாலை 7.00 மணி வரை மூடுமாறு உத்தவிடப்பட்டுள்ளதுடன் கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களாக பணியாற்றிய வௌிநாட்டவர்களில் 54 சதவீதமானவர்கள் குவைத்துக்கு வௌியே சிக்கியுள்ளனர். அவர்களில் வதிவிட அனுமதி காலாவதியானவர்கள் மறுபடி வரத்தேவையில்லை என குவைத் கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வௌிநாட்டவர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான ஒரு மாத கால பொது மன்னிப்புக் காலத்தை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுத்துறையில் பணியாற்றும் வௌிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க குவைத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுத்துறையில் 100 வீதம் குவைத் பிரஜைகளை உள்வாங்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என குவைத் வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சர் பைசல் அல் மெட்லெஜ் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் பல அரச நிறுவனங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் குறைத்து அவ்விடத்திற்கு குவைத் பிரஜைகளை உள்வாங்க வேண்டும். இரு வருட காலங்களில் சில அரச நிறுவனங்கள் நூறு வீத குவைத் மயமாக்கலாக்கப்படவேண்டும். கல்வி மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுகள் என்பவற்றில் 75 வீத குவைத் மயமாக்கல் உள்வாங்கப்படவேண்டும். விவசாயத்துறை போன்ற துறைகளில் குறைந்தது 75 வீத குவைத் மயாமாக்கல் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
2017ம் ஆண்டு தொடக்கம் குவைத் மயமாக்கல் திட்டத்தை குவைத் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. 2021ஆம் ஆண்டில் அரச துறைகளில் குவைத் நூறு வீதம் குவைத் பிரஜைகளை பணிக்கமர்த்துவது நோக்கமாகும்.
அதற்கமைய 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 120,000 புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்று வந்தனர். அவ்வெண்ணிக்கையானது தற்போது மிக வேகமாக குறைவடைந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அந்நாட்டு சமூக அலுவல்கள் அமைச்சு 120 ஒப்பந்த அடிப்படையிலான புலம்பெயர் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அந்நாட்டில் உள்ள 16 அரச நிறுவனங்களில 13 நிறுவனங்கள் குவைத் மயமாக்கப்பட்டுள்ளது என்று கடந்த செப்டெம்பர் மாதம் அந்நாட்டு சிவில் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதமளவில் பல்வேறு அரச நிறுவனங்கள் தமது நிறுவனங்களில பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை இடைநிறுத்தியுள்ளது. குறிப்பாக தொழில்நுட்பம் சாராத துறைகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வாறு பணிநீக்கம் செய்துள்ளனர். அடுத்தடுத்த வாரங்களில் அரச நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றிய சுமார் 1,183 புலம்பெயர் தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை அந்நாட்டு அரச நிறுவனங்கள் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை தமக்கு கிடைத்த கடவுச்சீட்டு விபரங்களை குவைத்துக்கான இலங்கை தூதரகம் வௌியிட்டுள்ளது.