இந்த ஆண்டு 1500 இலங்கையர்கள் தென் கொரிய தொழில்வாய்ப்பிற்காக அனுப்பப்படவுள்ளனனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
All Stories
கொரிய மொழித் தேர்ச்சியின்றியே 850,000 ரூபா வரை மாத சம்பளத்துக்கு தென் கொரியாவில் பல வேலைவாய்ப்புகள் உள்ளது என்று வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் பல்வேறு துறைகளில் பணியாற்ற தகுதி பெற்ற 119 பேர் நேற்று (07) தொழில் நிமித்தம் புறப்பட்டுச் சென்றனர்.
கொரியாவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய சுகாதார அறிவித்தலை அந்நாட்டு அரசாங்கம் வௌியிட்டுள்ளது.
தென் கொரியா மீன்பிடித் தொழிலில் வேலை வாய்ப்புக்காக 2022 இல் நடைபெறவுள்ள கொரிய மொழித் திறன் தேர்வுக்கான தேர்வுச் அனுமதி தற்போது வழங்கப்படுகிறது.
கொரியாவில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்துள்ள தகுதி பெற்ற 5800 பேர் எதிர்வரும் சில மாதங்களில் தொழில்வாய்ப்பினை நாடி செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் தொழில்வாய்ப்பினை பெற தகுதி பெற்ற இலங்கையர்கள் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பதிவு செய்யத்தேவையில்லை என இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு கொரியாவில் தொழில்வாய்ப்பை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய தகுதியானவர்களுக்கான தொழில் ஒப்பந்தம் தொடர்ச்சியாக கையொப்பமிடப்பட்டு வருவதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
தொழில் அனுமதியின் கீழ் இலங்கையர்களை கொரிய நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காக அனுப்புவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீசா காலம் முடிவடைந்த பின்னரும் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் தென் கொரியாவில் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றமையினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொழில்வாய்ப்புப் பங்கை இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் தொடக்கம் வாரத்திற்கு 250 பேர் என்ற வகையில் கொரிய மொழி தேர்ச்சி பெற்று தொழில் வாய்ப்புக்கு தகுதி பெற்றவர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கொரிய மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் லீ தெரிவித்துள்ளார்.