All Stories

மாச_கடைசியில்...

· காகம் கரையுதுங்க
புள்ள வைத்துல
புழு
கத்துதுங்க..
கஞ்சி வைக்க காசு இல்ல
கடன் கொடுக்க மனசு இல்ல
ரொட்டி தகரம் காஞ்சி
போச்சி
கட்ட குச்சி முடிங்சிருச்சி
கங்காணி கத்துரானே...
கால் கிலோ கொறஞ்சதுக்கு...
மூக்காய் கிட்ட
முன்னூறு
ஆராய் கிட்ட
அறுநூறு...
அடுத்த வீட்டுல கல்யாணம்
எதுத்த வீட்டுல கும்மாலம்....
சம்பளம் போட்டதுமே - காசு
போன இடம் தெரியலையே...
மறுநாளும் பட்டினியா?
மாறடைப்பு வந்துருமா?
ஒரு பக்கம்
விடியும் முன்னே...
கை புள்ளய தூக்கிகிட்டு
காலு ரெண்டு ஓடுதுங்க
கருணபாத்து அங்கொருத்தர்
கடன் குடுக்க போராரு...!!!
மீண்டும்
அந்த காகம்
கரையுதுங்க...
புள்ள வைத்துல புழு
கத்துதுங்க.......!!!!!!!!!

(நான் கொண்ட அவலம்)
ரா.கவிஷான்
கேம்பிரி - லிந்துல

மாச_கடைசியில்...

'1000' கனவு

காலங்கள் கடந்து போகின்றன
காட்சிப் பொருளாய் எம் ஏழ்மை - பலர்
வருகின்றனர், விசாரிக்கின்றனர்
ச்சுக கொட்டிவிட்டு குறிப்பெடுகின்றனர்- நாம்
இன்னும் அதே இடத்தில்!

கல்வி, சுகாதார மேம்பாடு
தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு
தலைமைத்துவப்பயிற்சி, உளவள ஆலோசனை
இப்படி பல திட்ட வரைபுகளை
யாருக்கோ, எங்கேயோ அனுப்புகிறார்கள்
காலம் கடக்கும் போது
வாகனமென்ன? ஆடம்பரமென்ன?
ஆங்கில பேச்சென்ன? அதிகாரமென்ன?
இப்படி மாறிப் போகின்றனர்- வந்து

விரும்பியோ விரும்பாமலோ
சந்தா வழங்குகிறோம்!
ஆளுக்கொரு சங்கம் வைத்து
எம்மை விற்கிறார்கள்!
கேட்டால் உரிமைக்காகவாம்!
வருடங்கள் பல கழிந்தும் - இன்னும்
காத்திருக்கிறோம் ஆயிரம் பெற

'1000' கனவு

செருப்பில்லா மனிதர்கள்

செருப்பில்லா மனிதர்கள்
செருப்பில்லா மனிதர்கள்
மிகப் பொறுப்பான மனிதர்கள்...

கருப்பான மனிதர்கள்
இவர்கள் கருத்தான மனிதர்கள்...

இவர் கால்களின் வலிமையோ
அந்த இரும்புக்கும் இல்லை...

இவர் உழைப்பின் மகிமைக்கு
அந்த வானமே எல்லை...!

அ. வேளாங்கண்ணி (எழுத்து)

 

செருப்பில்லா மனிதர்கள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image