C190 – FOR A WORLD OF WORK FREE FROM VIOLENCE AND HARRASSMENT

உங்களது பணியிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா?

அதாவது,
✖ ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள்
✖ ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைகள்
✖ அச்சுறுத்தல்கள்

என்பன போன்றான, ஒரு தடவை இடம்பெற்ற அல்லது தொடர்ந்து இடம்பெறும்,

✖ உடல் ரீதியான தீங்கு:
ஒரு நபருக்கோ அல்லது விலங்கிற்கோ பொதுவாக வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் உடல் ரீதியான காயம் அல்லது தீங்கு. தாக்குதல், கொலை மற்றும் கொலை முயற்சி, வன்முறை தொடர்பான அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல் உள்ளிட்ட உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் என்னும் முறைகள் ஊடாக இடம்பெறலாம்.

✖ உளவியல் தீங்கு:
உண்மையான அல்லது உணரப்பட்ட தீங்கின் விளைவாக ஏற்படும் எந்த வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி நிலை. உளவியல் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் என்னும் முறைகள் ஊடாக இடம்பெறலாம்.

✖ பாலியல் அல்லது பொருளாதார ரீதியான தீங்கு:
பொருளாதார மற்றும் நிதி துஷ்பிரயோகம் ஆகிய முறைகள் ஊடாக இடம்பெறலாம்.

✖ பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல்:
நபர்களது பால் அல்லது பாலினம் காரணமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பால் அல்லது பாலின நபர்களை விகிதாசார ரீதியாக அல்லாமல் பாதிக்கக் கூடிய மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல், கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், ஆட்கடத்தல் என்பன அடங்கும்.

பாலியல் வன்முறை, பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை பாலியல் துன்புறுத்தல் ஆகிய முறைகள் ஊடாக இடம்பெறலாம்.

✖ வாய்மொழி மூலமான துஷ்பிரயோகம்: பேசப்படும் நபருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலானா சொற்பிரயோகம் வாய்மொழி மூலமான துஷ்பிரயோகம் ஆகும்.

✖ கொடுமைப்படுத்துதல்: மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே செய்யப்படும் செயல்.

✖ பின்தொடர்தல்: ஒரு சாதாரண நபருக்கு குறிப்பாக வெளிப்படையான அல்லது மறைமுகமான அச்சுறுத்தல்கள் காரணமாக தீங்கு அல்லது மரணத்திற்கு அஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடியவாறு அந்நபரை வேண்டுமென்றே மற்றும் மீண்டும் மூலமான துஷ்பிரயோகம் பின்தொடர்வது அல்லது துன்புறுத்துவது போன்ற செயல் அல்லது குற்றம்.

என்பனவற்றை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் ஆகும்.

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image