பிசிஆர் பரிசோதனையின்றி வௌிநாட்டுப் பயணிகளை அனுமதித்தல் முட்டாள்தனமான தீர்மானம்!

பிசிஆர் பரிசோதனையின்றி வௌிநாட்டுப் பயணிகளை அனுமதித்தல்  முட்டாள்தனமான தீர்மானம்!

நாட்டுக்குள் நுழையும் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுப் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதில்லை என்ற தீர்மானமானது எந்தவித விஞ்ஞானரீதியான அடிப்படை எதுவும் அற்ற தீர்மானமாகும் என்று சுகாதார தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானமானது, சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமா? அல்லது வேறொருவரினால் அவருடைய கழுத்துக்கு கத்தி வைத்து எடுக்கப்பட்ட தீர்மானமா என்பது சந்தேகத்துக்குரியது. எவ்வாறு இருப்பினும் முழு நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்தீர்மானத்தை எடுத்தது யாரென்பதை வௌிப்படுத்துமாறு நாம் அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

நோய் தொற்றல் மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எவ்வித தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 'கொவிட் தொற்றில்லாதவர்கள்' என்ற முடிவுக்கு வந்துள்ளமையானது மிக முட்டாள்தனமானது. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்துக்கு கூட இல்லாத நம்பிக்கை எமது நாட்டில் வழிகாட்டல்கள் தயாரிக்கும் கீழ்தரமான விசேட நிபுணர்களுக்கு எப்படி வந்தது என்பது பிரச்சினைக்குரியது.

தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள் உட்பட உலகில் எந்த நாடும் தடுப்பூசி தொடர்பில் இந்தளவு நம்பிக்கை வைக்க முடியாது. தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்கு நீண்டகால நடமாட்டத் தடை விதித்திருக்கும் நாடு என்ற ரீதியில் இப்படியான ஒரு தீர்மானம் எடுத்தமையானது நாட்டை பாரிய அச்சுறுத்தலுக்கு இட்டுச் செல்லும் செயலாகும்.

PCR சோதனையின் உணர்திறன் 70% குறைவாக உள்ளது. இரண்டு முதல் மூன்று நாட்கள் விமானப் பயணமானது நிலையை மிக எளிதாக மாற்றியமைக்கும். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பிசிஆர் அறிக்கைகள் போலியானவை என்பது ஒரு பிரபலமற்ற ரகசியம். இத்தகைய சூழ்நிலையில், பொது மக்கள் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி மற்றொரு நாட்டில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 100% நம்பிக்கையுடன் நாட்டு மக்களை ஆபத்தில் ஆழ்த்துவது வெட்கக்கேடானது என்றும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image