நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
All Stories
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை இன்று முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், பணிகளுக்கு சென்றுள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் சம்பளம் குறித்து ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்று நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரை மேற்கோள்காட்டி தி ஐலண்ட் இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
தொழிற்சங்க போராட்டம் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு அறிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (13) வெளியிடப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இந்த மாதம் அரச ஊழியர்களுக்கு உரிய தினத்தில் சம்பளம் வழங்குவது தொடர்பில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்படக்கூடும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் இன்றைய நாளுக்குள் தமக்கு கிடைக்கும் என்று சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபுக்கள் பிரிவில் பணியாற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.