ஒருநாள் சேவையின் (one day service) ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மேலும் 3 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
வௌிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவை எதிர்வரும் 10ஆம் திகதிவரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையை சேர்ந்த 8 தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
இன்றைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போல இயங்கும் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலொன்றை நாட்டிற்கு வரவழைக்கும் இயலுமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லை என பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஆசிரியர்களை வற்புறுத்தி பாடசாலைக்கு அழைக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கில் தமது கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்தார்.
அரச ஊழியர்கள் எதிரநோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சந்தரப்பம் வழங்குமாறு, அரச சேவைகள் அமைச்சசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள எரிபொருளை அவதானமாக பயன்படுத்தும் வகையில் இன்று (28) தொடக்கம் அத்தியவசிய தேவைகள் மாத்திரமே முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.