ஒமிக்ரோன் 2.75 திரிபு பரவாதிருக்க தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்- GMOA
தற்போது இந்தியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் 2.75 திரிபு இலங்கையில் பரவும் அபாயம் நிலவுகின்றமையினால் இப்போதிருந்தே தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் குறித்த தொற்று இலங்கையில் பரவினால் அது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றமையினால் அமைச்சு உடனடியாக தொழில்நுட்ப ஆலோசனை குழுவொன்றை கூட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அச்சங்கத்தின் செயற்பாட்டாளர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.
இதுவரை கொவிட் தடுப்பூசிகள் மூன்றையும் செலுத்திக்கொள்ளாதவர்களை செலுத்திக்கொள்ள ஊக்குவிக்குமாறும் சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.