காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர், அங்கிருந்து வெளியேற வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
All Stories
கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு 8000 இற்கும் அதிகமான மாணவர்களை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை அலுவல்) லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் உள்ளடக்கிய பிறப்பு சான்றிதழை வழங்கும் செயற்பாடுகளை ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம் என்பன இணைந்து ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரமும் மூன்று நாட்களுக்கு இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகள் கல்வியமைச்சின் தீர்மானத்தை மீறிச் செயற்படுவது கண்டனத்திற்குரியது, அது குறித்து கல்வி அமைச்சிடம் முறையிடத் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இணைந்த சேவைகள் அலுவலர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பான அறிவுறுத்தல் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை மாகாணசபைக்குரிய சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் ஆட்சேர்ப்பு செய்தல் 2022 காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேயிலை கொழுந்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதென சிறுதேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் மக்கள் இயக்கத்தோடு இணைந்து அரசியல் கட்சிகளாக நாங்களும் இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிக்காக இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சியினை முடித்த ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வுக்கான முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமை குறித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.