மேல் மாகாணத்தின் 7 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்றிரவு 9 மணிக்கு அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
All Stories
தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், இன்று (08) நண்பகல் முதல் கடமைக்கு செல்லப்போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தவாறு தங்கள் பணிகளைச் செய்ய தீர்மானித்துள்ளனர்.
மாகாண சபைகளின் கீழியங்கும் நிறுவனங்களில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் சேவைக்காலத்தை 6 மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் இணக்கப்பாடு கிடைக்குமானால் தற்போது கல்வி காரியாலயங்களில் பணிபுரியும் 24,000 பட்டதாரிகளையும் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இலங்கை ரயில்வே திணைக்கள தலைமையகத்தின் முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பான வேலை திட்டம் குறித்து உடனடி பேச்சுவார்த்தை ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில அமைப்புக்களின் தலைவர்கள், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட சில பகுதிகளுக்குள் இன்று(07) பிரவேசிக்க தடை விதித்து, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல் விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள செலுத்தப்படாத விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது
எதிர்வரும் வாரங்களில் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை செயற்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.