அரச ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் கிடைக்காமல் போகுமா?

அரச ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் கிடைக்காமல் போகுமா?

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இந்த மாதம் அரச ஊழியர்களுக்கு உரிய தினத்தில் சம்பளம் வழங்குவது தொடர்பில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்படக்கூடும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

சம்பளம் வழங்குவதற்கான பணத்தை அச்சிட வேண்டும் என்பதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதி பெறப்படவேண்டும்.

தற்போதைய நிலைமைக்கு அமைய அமைச்சரவை கூட்டத்தை அழைக்க முடியுமா என்பது பிரச்சினை கூறியதாகும். பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவினால் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அழைப்பதே இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கான ஒரே ஒரு வழியாகும்.

அவசர அமைச்சரவை கூட்டம் அழைக்கப்படாவிட்டால​ைஇந்த மாதம் 25 ஆம் திகதி சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணத்தை அச்சிடுவதற்கு சட்டரீதியான சந்தர்ப்பம் ஏற்பட வேண்டுமாயின், அமைச்சரவை தீர்மானம் நிதி சபைக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலதிக கொடுப்பனவு, விடுமுறை, வாழ்க்கைச் செலவுகள் போன்ற அனைத்து கொடுப்பனவுகளையும் தவிர்தது, சம்பளத்திற்காக மாத்திரம் ஒரு மாதத்திற்கு 29 பில்லியன் ரூபா அவசியமாகும்.

 அமைதியான அதிகார பரிமாற்றத்தின் மூலமே மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும்

தொழிற்சங்கங்களினால் ஹர்த்தால் அறிவிப்பு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image