பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதால், அந்தப் பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றும் நிமித்தம், அரசியலமைப்பின் 37 (1) ஆம் சரத்துக்கமைய பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளதாக எனக்கு அறியப்படுத்தியுள்ளார்" என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.