போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம்!

ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எந்தவொரு பிரஜைக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொழிற்சங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு பொலிஸ் தலைமையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிற்சங்க,வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு நேற்றைய தினம் (11 ) பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டது.
May be an image of 9 people, people standing and outdoors
 
 மக்கள் போராட்டத்தை ஒடுக்காதே! 
 
ஊடகவியலாளர்கள் மீதான பொலிஸ், இராணுவத்தின் தாக்குதலை கண்டிப்போம்!
 
ஜனாதிபதி மாளிகையில் நடாத்திய துப்பாக்கி சூட்டிற்கு நீதியை நிலைநாட்டு!
 
எனும் தொனிப்பொருள்களில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
May be an image of 15 people, people standing, outdoors and text that says 'Brand Oriental Lotel 1837 ชગ අරගාලය මරදායට සදනම නෙවන! ජනු අරගල මර්ද්නය ජනපකි මැදුරෙ මඩි කඹිටට ක්‍රියත්මක ජන අරගලය මර්දනයට සූදානම් නොවනු! හමුදාව, පොලිසිය මාධ්‍යවේදින්ට කළ පහර දීම හෙළා දකමු! ජනපති මැදුරේ කළ වෙඩි තැබීමට හීතිය ක්‍රියාත්මක කරනු! மக்கள் போராட்டத்தை ஒடுக்காதே! தாக்குதலை கண்டிப்ே பாம்! ஊடகவியலாளர்கள் மீதான பொலிஸ் ஜனாதிபதி மாளிகையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இராணுவத்தின் நீதியை நிலைநாட்டு! වෘත්තීය සමිති හා බහුජන සංවිධාන එකතුව தொழிற்சங்கங்கள் மற்றும் செகுஜன அமைப்புக்கள் கூட்டிணைவு'
 

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க,வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் பொதுமக்களின் எழுச்சி என்றும் இதற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் ஆர்வலர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

May be an image of 8 people, people standing and outdoors

ஜூலை 9ஆம் திகதி தேவையின்றி பலரின் உரிமைகள் மீறப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சார்பில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். 

இதேவேளை, கடந்த 9ஆம் திகதி மக்கள் போராட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

May be an image of 1 person, walking, standing, outdoors and crowd

May be an image of one or more people, people sitting, people standing, outdoors and crowd

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image