நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று முற்பகல் காணொளி தொழில்நுட்பம் வாயிலாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.