அரச ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் சம்பளம் குறித்து ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்று நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரை மேற்கோள்காட்டி தி ஐலண்ட் இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
மத்திய வங்கியிடம் பணம் அச்சிடக் கோராமல் சம்பளம் வழங்க நிதியமைச்சு முயற்சிப்பதாகவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
சிலர் அரச ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்கப்படாது என்று வதந்திகளை பரப்புகின்றனர். இவ்வாறான வதந்திகள் மக்கள் மத்தியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும்.
இலங்கையில்2014ம் ஆண்டு தொடக்கம் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 11 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 1.5 மில்லியன் அரசு ஊழியர்கள் உள்ளனர். 2021 ஆம் ஆண்டில் அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைச் செலுத்துவதற்காக சுமார் 86 சதவீத வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசின் மொத்த வரி வருமானம் 1,216 பில்லியன் ரூபாவாகும், அரசாங்க சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக 1,052 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை செலுத்திய பிறகு, மொத்த வரி வருமானத்தில் 164 பில்லியன் ரூபா மாத்திரமே மிகுதியாகிறது. உலகெங்கிலும் உள்ள வளர்ந்த, நடுத்தர வருமானம் மற்றும் ஏழை நாடுகளை இந்த கொவிட் தொற்று கடுமையாக பாதித்துள்ளது. இதனால் 4 மில்லியனுடக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
தொற்றுநோய் மோசமாக பாதித்துள்ளது மற்றும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். பசி, போஷாக்கின்மை மற்றும் வறுமை ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், எந்தவொரு அரசாங்கத்திற்கும் பொது நிதி நிர்வாகத்தை பராமரிப்பது எளிதான விடயமில்லை.
1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற போது 113 இலங்கையர்களுக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். இருப்பினும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் சிவில் சேவையை விரிவுபடுத்தியது. இப்போது 13 இலங்கையர்களுக்கு ஒரு அரசு ஊழியர் என்ற விகிதமாக உள்ளது,” என்றார்