பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் நேற்று நடைபெற்ற கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
All Stories
(மா.பிரபா)
மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஓல்ட்டன் தோட்டத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் நேற்று (19) உத்தரவிட்டுள்ளார்
ஹொரன பிலான்டேசன் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஓல்ட்டன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளில் உள்ள சுமார் 300 தொழிலாளர்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். தோட்டத்தின் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்களின் செயற்பாடுகள் திருப்பதியற்றதாக உள்ளதால் தம்மால் அவர்களின் கீழ் பணியாற்ற முடியாது அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த மூன்றாம் திகதி முகாமையாளர்கள் வேண்டாம் என்ற கூறி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டதுடன் ஐந்தாம் திகதி சம்பள உயர்வுக்கான அடையாள வேலை நிறுத்ததிலும் ஈடுப்பட்டனர். இதன் போது தேயிலை பெட்டிகளை தோட்ட தொழிற்சாலையில் இருந்து விற்பனைக்காக வழமையாக கொண்டு செல்லும் செயற்பாட்டின் போது அதை தடுத்த தம்மை முகாமையாளர்கள் தாக்கியதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிகழ்வின் எதிரொலியாக ஒல்ட்டன் தோட்ட தொழிலளர்களால் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறி பணிபகிஸ்கரிப்பை முன்னெடுத்து வந்தனர். இந்த பணிபகஸ்கரிப்பின் போது தமது தொழிற்சங்கங்கள் தம்மை கைவிட்டு விட்டதாகவும் இவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த பணிபகிஸ்கரிப்பின் காரணமாக இந்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டிய கடந்த மாத வேதனம் வழங்கப்படாத நிலையில் தொழில் ஆணையாளர் பணிபுரையின் படி இம்மாதம் 13 ஆம் திகதி தொழிலாளர்களுக்கு முகாமையினால் வேதனம் வழங்கப்பட்டதுடன் 15ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாகவும் உடன்பாடு ஏற்பட்டதாக தோட்ட முகாமை தெரிவித்தது.
இருந்த போதும் வேதனத்தை பெற்ற பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல். முகாமையார்கள் வெளியேற வேண்டும் என்று தொடர் பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வந்த நிலையில் 17 திகதி புதன்கிழமை முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் தொழிலாளர்கள் தாக்க முற்பட்டதாக மஸ்கெலிய காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
முகாமையின் முறைப்பாட்டின் அடிப்படையில் எட்டு ஆண் தொழிலாளர்களையும் ஒரு பெண் தொழிலாளியையும் கைது செய்த மஸ்கெலிய பொலிசார்நேற்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போதே இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபேசன் தெரிவித்தார்.
மேல் மாகாணசபை வைத்தியசாலைகளில் பணியாற்றும் சில வைத்தியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும் அவற்றை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் மாகாணசபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்றினால் தற்போதுள்ள சுகாதார பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளில் நிகழ்வுகளை நடத்துவதில் சிலர் ஆர்வம்காட்டிவருவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
போதை பொருள் பாவனைக்கு அடிடையாகியுள்ள மாணவர்களை அடையாளங்கண்டு அப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான விசேட பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு எஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது.
நேற்று 06 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது.
அபிவிருத்தி அலுவலர்களின் சேவையின் அதிகாரிகளின் உள்வாங்குவதற்காக, உறுதிப்படுத்தல், பதவி உயர்வு மற்றும் பிற நிறுவன விஷயங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் இன்று மட்டும் சுமார் 57,000 பேருக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட விடயங்களை பாதுகாத்து கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பிரச்சினை தீர்த்து கொள்வதற்கு தேவையான காலம் உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி தொழிலில் ஈடுபடும் போது இளைப்பாற, உணவு உட்கொள்ள மலசலகூட வசதிகளை கொண்ட ஓய்வறை கட்டிடங்கள் மலையகம் முழுவதும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ள பிரிந்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள கொவிட் 19 திரிபை கொவிட்ஷீல்ட் எஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியில் கட்டுப்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார தாபன பணிப்பாளர் நாயகத்தின் உலக கொவிட் 19 பதிலளிப்புக்கான விசேட தூதுவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட்- எஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியை 180,000 பேருக்கு செலுத்தும் போது சுமார் 40,000 தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருக்கலாம் என்றுஇலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.