மேல் மாகாணசபையின் கீழியங்கும் வைத்தியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் இல்லை

மேல் மாகாணசபையின் கீழியங்கும் வைத்தியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் இல்லை

​மேல் மாகாணசபை வைத்தியசாலைகளில் பணியாற்றும் சில வைத்தியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும் அவற்றை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் மாகாணசபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயத்தை கவனத்தில் எடுத்து உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையாக மாகாணசபைக்கு வைத்தியர்களை நியமிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்றும் அச்சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சுகாதார பணிப்பாளர் நாயகம் அலுவலகத்திற்கு வைத்தியர்களை இணைக்கும் நடவடக்கை மற்றும் வைத்தியசாலை மற்றும் சுகாதார சேவைகள் நிறுவனங்களில் பணியாற்றும் சில வைத்தியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

கொவிட் 19 தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள மேல் மாகாணத்தில் வைத்தியர்கள் இரவு பகல் பாராமல் கடமையாற்றி வருகின்றனர். எனினும் அவர்களுக்கான சம்பளம் இதுவரை கொடுக்கப்படவில்லை.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image