இலங்கையில் இன்றைய தினம் வரையில் 100,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
All Stories
கொழும்பு தெற்கு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர் 35 வருடங்களின் பின்னர் மீள பெறுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுபாடு வழங்கப்படவோ மாட்டாது என பிரதமர் குறிப்பிட்டார். அது 100 வீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக தொடர்ந்தும் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, துறைமுக தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு முற்றுபுள்ளி வைபதற்கான உலக தொழிலாளர் தாபனத்தின் C190 பிரகடனத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தன் முக்கியத்துவம் குறித்த பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் எம்பி ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
பட்டதாரி பயிலுநர்களை சேவையில் இணைப்பதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் நாளை (01) அவர்களுக்குரிய பிரதேச செயலகங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முற்றாக துறைமுக அதிகாரசபையின் கீழியங்குவதற்கான அனுமதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இம்மாதம் 15ம் திகதி கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.
பயிற்சி முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிந்திய திகதியில் நியமனம் வழங்குமாறு கோரி நடத்தப்படவுள்ள இவ்வார்ப்பாட்டத்தையடுத்து பயிற்சியின் பின்னர் இதுவரை நிரந்தர நியமனம் பெறாத பட்டதாரிகள் ஊர்வலமாக செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய கம்பனிக்கு வழங்கப்படுவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக திருகோணமலை துறைமுக தொழிற்சங்கங்கள் களமிறங்கியுள்ளன.
மேலும் நாளையதினம் (01) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் திருகோணமலை துறைமுகத்தின் சுதந்திர ஊழியர் சங்கத்தன் தலைவர் எச்.எம்.ஏ ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தற்போது கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருகோணமலை தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சங்கமொன்றை அமைத்து தற்போது சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. அத்துடன் நாளை பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை திருகோணமலை துறைமுகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கருத்து வௌியிட்டார்.
இதேவேளை, துறைமுக திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் அத்தியவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி நேற்று (30) விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நேற்று (31) 21,329 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனக்கா கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொத்தமாக நாட்டில் 59, 154 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்தியா Oxford-AstraZeneca - COVISHIELD தடுப்பு மருந்தை இலங்கைக்கு கையளித்ததையடுத்து தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை கடந்த 29ம திகதி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.e Ministry of Health says that 21,329 frontline healthcare workers were vaccinated with the Oxford-AstraZeneca COVID-19 vaccine yesterday (31), at selected locations across the country.
முன்னுரிமை அடிப்படையில் 150,000 சுகாதாரத்துறை ஊழியர்கள், 120,000 முப்படையினர் மற்றும் பாதுகாப்பத்தரப்பினர் போன்ற கொரோனா தடுப்புப் பணிகளில் முன்னிலை வகிக்கும் ஊழியர்கள் தடுப்பு மருந்து பெற எதிர்பார்த்துள்ளனர். இதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட தொற்றாநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொழிற்கல்வி அதிகாரசபையின் கீழ் இனிவரும் காலங்களில் புகைப்பட கலை (NVQ Level 4) சான்றிதழ் கற்கை நெறியை கற்கும் வாய்ப்பு இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
கிழக்கு முனையம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு 6 யோசனைகளை நேற்று முன்தினம் (29) முன்வைத்துள்ளன.
அவற்றில் தெரிவித்திருப்பதாவது,
- பூகோள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்காக மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானை உள்ளடக்கி அபிவிருத்தி செய்தல் வேண்டும்
- CICT நிறுவனத்தை ஸ்தாபிக்கும் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு நிகரான ஒப்பந்தத்தை கைச்சாத்திடல் வேண்டும்
- கிழக்கு முனையத்தை வழங்குவதற்கான முடிவு, மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்தல் என்பவற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை ஒரே தடவையில் பெறல் வேண்டும்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றியம் இன்று மாலை ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனடிப்படையில்,
- மேற்கு முனையம் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கும்
- கிழக்கு முனையத்தின் நூறு வீதமான உரிமை மற்றும் முகாமைத்துவம் துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்து அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்
என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூலம் - newsfirst.lk/tamil