பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

கொரோனா தொற்றினால் தற்போதுள்ள சுகாதார பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளில் நிகழ்வுகளை நடத்துவதில் சிலர் ஆர்வம்காட்டிவருவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என தாம் அனைத்து மாகாண வலய கல்வி பணிப்பாளர்கள் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.

சில பாடசாலைகளில் வைபவங்களும், பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்தினதும் சுகாதாரப் பாதுகாப்பிற்கு ஆபத்தாகும். அதனால், பொறுப்புடன் நடந்து கொள்வது முக்கியமாகுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக எதிர்வரும் 17ம் திகதி முதல் 25ம் திகதி வரை கற்கை விடுமுறையை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image