கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்து கடமைகளை முன்னெடுக்க வழங்கப்பட்டிருந்த ஏற்பாடு முடிவடைவதாகவும் நாளை (08) திகதி தொடக்கம் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அவரவர் பணியிடங்களுக்கு வருகைத் தரவேண்டும் என்றும் பொது நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
ஆங்கில மற்றும் ஏனைய பாட விடயங்களுக்குள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவைப் பிரமாணம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
அதிபர் தெரிவுக்கான நடைமுறையை மாற்றி பதவியுயர்வுகளை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளன.
எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை (Gender Equity and Equality) உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வயது எல்லை காரணமாக அநீதிக்குள்ளான வேலையற்ற பட்டதாரிகள் இன்று (03) கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்னால் போராட்டம் நடத்தினர்.
அரச சேவையில் சேவையாற்றும் ஆரம்ப மட்டத்திலுள்ள உள்வாரி பட்டம் பெற்ற அலுவலர்களின் தகவல்களை வழங்குவது தொடர்பான அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
பயிற்சிக்கு தகுதி பெற்ற மற்றும் இன்னும் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கு, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனக் கடிதங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசசேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உறுதியளித்துள்ளதென ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஹோல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் அட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (4) தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும்போது வயதெல்லை பார்க்கப்படுமாயின், அரசியல்வாதிகளுக்கும் வயதுதெல்லையை நிர்ணயிக்க வேண்டும் என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் 2, 3 நாட்களில் வெளியாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொழில் ஆணையாளர் நாயகத்தினால் இன்று கையளிக்கப்பட்ட வேதன நிர்ணய சபையின் தீர்மானம், நியாயமானது என்பதனால், அதனை அங்கீகரித்து, உடனடியாக வர்த்தமானிப்படுத்த தீர்மானித்ததாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2, 3 நாட்களுக்குள் அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்திருந்த ஆயிரம் ரூபா வேதனத்தை அன்று முதல் கட்டாயமாக வழங்கவேண்டிய நிலை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஏற்படும். அவ்வாறு வழங்காவிட்டால், தொழிற்திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முன்னதாக அடிப்படை வேதனமாக 700 ரூபாய் வழங்கப்பட்டது. அத்துடன் மேலதிக கொடுப்பனவாக 50 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவாக 161 ரூபாவும் வழங்கப்பட்டது. இதன்படி நாளாந்த வேதனமாக 911 ரூபாய் வழங்கப்பட்டது. இந்தநிலையில், புதிய தீர்மானத்தின்படி, நாளாந்த வேதனமாக 900 ரூபாவும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவாக 230 ரூபாவை பெருந்தோட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,230 ரூபாவாக வேதனம் அதிகரிக்கும். முன்னரை விடவும் நாளாந்தம் 319 ரூபாய் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வேதனத்தில் இது 35 வீத அதிகரிப்பாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வேதன அதிகரிப்புடன், அதன் சராசரிக்கு அமைய, பணிக்கொடை கொடுப்பனவு அதிகரிப்பதுடன், மேலதிக கொடுப்பனவு விடுமுறைக் கொடுப்பனவு, மகப்பேற்றுக் கொடுப்பனவு என்பனவும் அதிகரிக்கும்.