மேல் மாகாணத்தில் இன்று 57,000 பேருக்கு தடுப்பு மருந்து

மேல் மாகாணத்தில் இன்று 57,000 பேருக்கு தடுப்பு மருந்து

மேல் மாகாணத்தில் இன்று மட்டும் சுமார் 57,000 பேருக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 17,622 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 17,622 பேருக்கும் களுத்துறை மாவட்த்தில் 11,710 ​பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவடத்தில் கொலன்னாவ, கொதொடுவ, மொரட்டுவ, எகொடஉயன மற்றும் ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, பண்டாரகம, மதுகம, பாணந்துறை, ஹொரன, பேருவல ஆகிய பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, நீர்கொழும்பு, வத்தளை, மினுவங்கொட, ராகம, ஜாஎல மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் 30 வயது தொடக்கம் 60 வயதானவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒக்ஸ்போர் எஸ்ட்ராசெனெக்கா தடுப்பு மருந்தின் முதல் மருந்தானது கொவிட் 19 தொற்றிலிருந்து மருந்து வழங்கப்பட்டு மூன்று வார காலத்தில் 70 சதவீத பாதுகாப்பை வழங்குகிறது. இரண்டாவது கட்ட மருந்து மேலும் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image