கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ள கருத்து

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ள கருத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட விடயங்களை பாதுகாத்து கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பிரச்சினை தீர்த்து கொள்வதற்கு தேவையான காலம் உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தில் இருந்து சிறந்த முடிவு கிடைக்காமையினாலேயே சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்த்து, 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.

இரு தரப்பினரும் பேசி கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியுமாயின் அதற்கு ஆதரவு வழங்க நாம் தொடர்ந்தும் தயாராகவுள்ளோம்.

பெருந்தோட்ட சம்மேளனத்தினர் பிரச்சினைகளை முன்வைப்பது அவர்களின் உரிமை. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். எனினும் தோட்ட தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட விடயங்களை பாதுகாத்து கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பிரச்சினை தீர்த்து கொள்வதற்கு தேவையான காலம் உள்ளது.

இதேநேரம், 1,000 ரூபா நாளாந்த சம்பளமாக அதிகரிப்பதற்கான வரத்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image