வீணடிக்கப்பட்ட 40,000ஒக்ஸ்போர்ட்- எஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள்

வீணடிக்கப்பட்ட 40,000ஒக்ஸ்போர்ட்- எஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள்

ஒக்ஸ்போர்ட்- எஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியை 180,000 பேருக்கு செலுத்தும் போது சுமார் 40,000 தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருக்கலாம் என்றுஇலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு தடுப்பூசி குப்பியில் உள்ள மருந்தினை 10 பேருக்கு மட்டுமே செலுத்த முடியும். 10வது நபருக்கு செலுத்தப்பட்ட பின்னர் மீதமுள்ள மருந்து ஒதுக்கப்படவேண்டும். ஒருவருக்கு 0.5 மிலீ வீதம் அளவு வீதம் 10 பேருக்கு செலுத்த 5 மி.லி தேவைப்படும், அரசாஙகம் 180,000 பேருக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ளது.

அதற்கமைய, 5:1 தடுப்பு மருந்து வீணாக்கப்படுகிறது. உலகம் முழுவதும் தடுப்பு மருந்து பற்றாக்குறை நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு மருந்தை வீணாக்குவது தேசிய குற்றமாகும் என்றும் ரவி குமுதேஷ் விசனம் தெரிவித்தார்.

தடுப்பூசி குப்பியில் பத்து நபர்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக உள்ளது. எனவே, பதினொன்றாவது நபரை கவனத்தில் கொள்ளலாம் என்று குமுதேஷ் கூறினார். இருப்பினும், சுகாதார ஊழியர்கள் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு எதிராக செல்ல முடியாததால், இந்த தொகையை நிராகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேவையான அளவை விட அதிகமாக இருப்பது ஊழலுக்கு வழி வகுத்தது என்றார். எனவே, சுகாதார அமைச்சகம் இந்த பிரச்சினையை ஆராய்ந்து, தடுப்பூசி போடுவதில் ஈடுபட்டுள்ள அடிமட்ட சுகாதார ஊழியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அதிகாரம் அளிக்க வேண்டும், மருந்து வீணாகாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts