அரச - தனியார் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவித்தல்
அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு எஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
30 வயதிற்கும், 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளமுடியும். தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்சமயம் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ, கொத்தட்டுவ, மொரட்டுவ, எகொடஉயன, ஹங்வெல்ல ஆகிய இடங்களில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்டத்தில், கம்பஹா, அத்தனகல்ல, நீர்கொழும்பு, சீதுவ, மஹர, பியகம, வத்தளை, மீரிகம, ராகம, மினுவாங்கொட, ஜாஎல, களனி, கட்டான, திவுலபிட்டிய, தொம்பே ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளலாம். களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பண்டாரகம, பாணந்துறை, ஹொரண, மத்துகம ஆகிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.