இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2021 - 2022 ஆண்டுக்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
All Stories
தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொவிட் 19 திரிபு உட்பட கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பு மருந்தை பொது மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று இலங்கை மருத்தவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 14 நாட்களுக்கு பின்னர் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் 11 கோரிக்கைகளை வெல்லும் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
அனைத்து வளர்ச்சி அதிகாரிகளினதும் கோரிக்கைகளின் அடிப்படையில் மார்ச் மாதம் ஒரு ஐக்கிய போராட்டத்திற்கு தயாராக உள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த 11 கோரிக்கைகளும் வருமாறு,
01. 2019 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சி பட்டதாரிகள் முன்பே நிரந்தரமாக்கப்ப்பட வேண்டும்!
02. 2020 இல் நிரந்தரமாக்கப்ப்படுத்தப்பட்ட அபிவிருத்தி அதிகாரிகளின் இழந்த சேவை காலத்தை (4 மாதங்கள்) (2018 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது) சேவையில் சேர்க்கவும்!
03. அபிவிருத்தி அலுவலர் அதிகாரிகளின் பயிற்சி நேரத்தையும் சேவையில் சேர்க்கவும்!
04. மகப்பேறு விடுப்பு வெட்டு திரும்பப் பெறுங்கள்!
05. அபிவிருத்தி அலுவலர் சேவையில் பயிற்சி பட்டதாரிகளை நிறுவும் போது பயிற்சியாளரை நியமித்த நாளிலிருந்து தகுதிகாண் காலத்தைக் கணக்கிடுங்கள்!
06. 2020ஃ2021 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சி பட்டதாரிகளை 6 மாதங்களில் நிரந்தரப்படுத்து!
07. அனைத்து . அபிவிருத்தி அலுவலர் அதிகாரிகளுக்கும் முறையான கடமைகளின் பட்டியலைக் கொடுங்கள்!
08. அபிவிருத்தி அலுவலர் அலுவலர் ஊக்குவிப்பு முறையை விரைவாக உருவாக்குங்கள்!
09. அபிவிருத்தி அலுவலர் முறையான பரிமாற்ற முறையை உருவாக்குங்கள்!
10. களங்களில் கடமையில் இருக்கும் அபிவிருத்தி அலுவலர் மேம்பாட்டு அதிகாரிகளை ஒரு சுயாதீன அலகு என்று நிறுவுங்கள்!
11. 2016 க்குப் பிறகு இழந்த ஓய்வூதிய உரிமைகளை திருப்பித் தரவும்!
அனைவரும் ஒன்று கூடுவோம்!
ஒரு அபிவிருத்தி அதிகாரி அதிகாரத்தை உருவாக்குவோம்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபவோருக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எவ்விதத்திலும் தொடர்புபட்டிருக்கவிலை என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை அப்பட்டமான பொய்யாகும். குறித்த எண்ணிக்கையில் 8,000 இற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டியுள்ளது.
'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியைப் போன்று, 'பட்டதாரிகளுடன் உரையாடல்' நிகழ்ச்சி ஒன்றை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்;கை விடுத்துள்ளது.
சுகாதாரத்துறைசார் 11 கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் கொழும்பில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது.
தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி, மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100,000 வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 2 விசேட பரீட்சை மத்திய நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தில் உள்வாங்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தருமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் திணைக்கள பணிப்பாளருக்கு கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து அனுப்பப்பட்டடுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடமை பொறுப்புக்களை சரிவர செய்வதற்கு தேவையான அலுவலக உபகரணங்களை வழங்குதல். கணனி, அல்லது மடிக்கணனி மற்றும் அச்சு இயந்திரத்தை வழங்கல்.
குறைந்தது 10 நாள் கொடுப்பனவு, போக்குவரத்து செலவு அல்லது சம்பளத்தில் 3/1 பகுதியை வழங்கல்
பல்நோக்கு அபிவிருத்தி படையணி திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்வாங்கி, உரிய பதவியுயர்வு, உரிய மதிப்பிடல் செயற்பாட்டை உருவாக்குதல்
மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணியை இலகுவாக முன்னெடுக்க றப்பர் முத்திரையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அதன் அதிகாரத்தை வழங்கல்.
வழங்கப்படும் அதிகாரத்தை எழுத்து மூலமாக வழங்கல், கடமைப் பொறுப்புக்களை மாவட்டச் செயலாளர் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்தல்
போன்ற விடயங்கள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.