ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய பயிற்சி

ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய பயிற்சி

போதை பொருள் பாவனைக்கு அடிடையாகியுள்ள மாணவர்களை அடையாளங்கண்டு அப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான விசேட பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

அதற்கான முதற்கட்டமாக அனைத்து பாடசாலைகளும் உள்ளடக்கப்படும் வகையில் மூன்று ஆண் பெண் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையினால் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவனையை அதிகரிப்பதற்கு விற்பனையாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுப்பதற்கு நீண்டகால செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு பாடசாலைகளில் போதைபொருள் தடுப்பு குழுவொன்றை நியமிப்பதற்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள், மற்றும் பெற்றோர் உள்ளடக்கப்பட்ட வகையில் இக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இதனூடாக பாடசாலைகளில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மாணவர்களை தெரிவு செய்து போதை பொருட்களை பாடசாலைக்கு வரும் வழிமுறைகளை அடையாளங்காணப்பட்டு அதன் ஆபத்து குறித்து மாணவர்களை தௌிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

 

Author’s Posts