கொவிட் 3ம் அலை ஏற்படுமா?

கொவிட் 3ம் அலை ஏற்படுமா?

​கொழும்பில் புதிய கொரோனா திரிபுடைய இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று கொழும்பு மாநகரசபை பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் பொறுப்பின்றி செயற்பட்டால் கொவிட் 3ம் அலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது கொழும்பில் இருவருக்கு புதிய கொரோனா திரிபு தொற்று இருந்தமை அடையாளங்காணப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாம் அலையை நாம் சிறப்பாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். எனினும் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படாவிடின், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாவிடின் மூன்றாம் அலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Author’s Posts