பண்டிகைக்காலத்தில் புதிய கொத்தணிகள் உருவாகாமல் தடுப்பது பொதுமக்களின் கடமை என்று சுட்டிக்காட்டியுள்ள பொது சுகாதார பரிசோகதர் சங்கம் நாட்டை முடக்குவது நடைமுறை சாத்தயமற்றது என்றும் தெரிவித்துள்ளது.
All Stories
ஒரே தடவையில் செலுத்தக்கூடிய ஜோன்சன்ஸ் அண்ட் ஜோன்சன்ஸ் கொவிட் தடுப்பு மருந்தை நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க வேண்டும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச்செய்யக் கோரி, எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கான உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் சிலர் குறை காண்கின்றனர். தொழிலாளர்களுக்கான நலன்கள் இல்லாதுபோய்விடும் எனவும் விமர்சிக்கின்றனர். நாம் தொழிலாளர்களை பாதுகாப்போம். எனினும், சந்தா வாங்கும் சிலர் தொழிலாளர்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ராகலை - மாகுடுகலை தோட்டத்தில், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு, நுவரெலியா மாவட்ட தொழில் அலுவலகம், தோட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
இலங்கை வருகைத்தரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிமுறைகள் தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக்குழுவை சந்தி்த்து கலந்துரையாடவுள்ளதாக , ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் -19 நோய் கட்டுப்பாட்டு அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்
(பி.மாணிக்கப்பிள்ளை)
சாமிமலை ஓல்ட்டன் தோட்ட முகாமையாளரை தாக்கியது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 22 தொழிலாளர்களுக்கான பிணை 10.03.2021 புதன்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இந்த தொழிலாளர்களுக்கு பிணை பெற்றக் கொடுப்பதற்காக முன்னிட்டு செயற்பட்ட சட்டத்தரணி நேரு கருணாகரனிடம் குறித்த வழக்கு தொடர்பான விடயங்களை நாம் வினவியபோது அவர் பின்வருமாறு தமது கருத்தை தெரிவித்தார்.
கடந்த 18ஆம் திகதி சாமிமலை ஓல்ட்டன் தோட்ட முகாமையாளரை தாக்கினார்கள் என குற்றபம் சுமத்தப்பட்ட தோட்டத்தின் 7 பெண் தொழிலாளர்கள் உட்பட 8 தொழிலாளர்கள் அட்டன் நீதவான் நீதிமனில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை 03.03.2021 வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நானும் பண்டாரவலையை சேர்ந்த சட்டத்திரணி ஸ்ரீல்ராஜ் இருவரும் சேர்ந்து நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக இந்த தொழிலாளர்களை பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த போது பொலிஸ் மற்றும் முகாமை சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் அட்டன் நீதிமன்ற சட்டத்தரணிகள் சிலரும் ஆஜராகி இந்த தோட்ட தொழிலாளர்கள் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுப்படுவதாகவும், தீவிரவாத செயற்பாடுகளின் ஆரம்பகட்ட செயற்பாடாகவே இந்த தாக்குதலை தாம் பார்ப்பதாகவும் தீவிரவாத சட்டத்தின் கீழ் மேலும் பல குற்றச்சாட்டுக்களை இவர்கள் மீது சுமத்துவதன் ஊடாக இவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.
இவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 03.03.2021 அன்று ஆஜர்படுத்தப்பட்ட மேலும் இரண்டு தொழிலாளர்கள் உட்பட 10 தொழிலாளர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
அதன் பிறகு தோட்ட தொழிலாளர்கள் சார்பாக நான் மற்றும் சட்டத்தரணி ஸ்ரீல்ராஜ் உட்பட் மேலும் பல சட்டத்தரணிகள் இணைந்து கௌரவ நீதிமன்றத்திற்கு இவ்விடயம் தொழிலாளர்களின் வேதனத்தை அடிப்படையாக கொண்ட பிரச்சினை பொலிசார் கூறுவது போல் அங்கு கொள்ளைச் சம்பவமோ தீவிரவாத சம்பவமோ இடம்பெறவில்லை என எடுத்துக் கூறினோம்.
மேலும் அவர்கள் தங்களின் நாளாந்த வேதனத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் அதனை மழுங்கடித்து பலி தீர்க்கும் முகமாக தோட்ட முகாமை பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த தொழிலாளர்களை சிறையில் அடைக்க வழி செய்துள்ளதாகவும் கௌரவ நீதிமன்றத்திற்கு எடுத்து கூறியதோடு தொழிலாளர்களை தீவிரவாதிகள் என்று கூறிய கருத்தினை வாபஸ் வாங்குவதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
இந்நிலையில் எமது இரு தரப்பு நியாயங்களையும் கேட்ட நீதிமன்றம் குறித்த 10 தொழிலாளர்களையூம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவித்தது
அத்துடன் மேலும் 12 தொழிலாளர்கள் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் தாங்களாக பொலிசில் சரணடைந்த நிலையில், அவர்கள் தங்க ஆபரணகளை சூரையாடினார்கள், தோட்ட பங்களாவிற்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களும் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களுக்கும் பிணை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
குறிப்பாக ஒரு மாதம் தொடக்கம்; ஒரு வயது வரையிலான குழந்தைகள் உடைய தாய்மாரும் இதில் அடங்குவதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அவர்கள் யாரும் தோட்ட முகாமைக்கு எதிராகவோ நீதிமன்றத்திற்கு எதிராகவோ எந்த செயற்பாட்டிலும் ஈடுப்படவில்லை அவர்களின் போராட்டம் முழுமையாக நாளாந்த வேதனம் தொடர்பாகவே காணப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது என்று சட்டத்தரணி நேரு கருணாகரன் எம்மிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த தொழிலாளர்களின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த பல சிவில் அமைப்புகள் இவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்களை பிணையில் எடுப்பது வரை தங்களின் முழுமையான பங்களிப்பினை வழங்கியமையை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர், கௌரவ நீதிமன்றம் இனி வரும் காலங்களில் இவ்வாறான போராட்டங்களின் போது எவ்வித தாக்குதல்களில் ஈடுப்படவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ கூடாது என்று நிபந்தனையாக கூறியதோடு தலா ரூபா 15000 ரொக்க பிணை மற்றம் சரீர பிணையில் அவர்களை விடுதலை செய்தது.
இந்த வழக்கு எதிர்வரும் 28 ஏப்பிரல் அன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த தொழிலார்களின் நியாயத்தை நான் உட்பட பல சட்டதரணிகள் சுயமாக முன் வந்து வாதாடியமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்ு
ஆரம்பித்தில் எந்த தொழிற்சங்கங்களும் இந்த தொழிலாளர்களின் வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் இவர்களுக்க பிணை வழங்கப்படும் என்ற நிலையில் தங்களின் பெயரை விளம்பரபடுத்திக் கொள்வதற்காகவும் தொழிலாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் நோக்கில் சட்டத்தரணிகள் கண்டியில் இருந்து வந்திருப்பதாக எல்லாம் காட்டிக் கொண்டார்கள் எனினும் இதற்கு முதல் எவரும் அவ்வாறு ஆஜராகாத நிலையில் நாம் பிணை கொடுக்கும் நிலைக்கு இந்த வழக்கை கொண்டு வந்த நிலையில் அவர்கள் இவ்வாறு செய்தது கேலி கூத்தாகவே உள்ளது என்றும் நேரு கருணாகரன் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட பல சட்டத்தரணிகள் தோட்ட முகாமைத்துவத்திற்கு சார்பாக ஆஜரான நிலையில் தொழிலாளர்களுக்காக நான் மற்றம் சட்டத்தரணி ஸ்ரீல்ராஜ் உட்பட சில அட்டன் சட்டத்தரணிகளே ஆஜரானோம் எனினும் தொழிற்சங்கங்கள் எந்த ஒரு சட்டத்தரணியையும் வெளியில் இருந்து அழைத்து வரவில்லை என்பதே உண்மை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளருக்கான ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு வேறு சில வழிமுறைகள் உள்ளன. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றலாம். இதனால் தாமதங்கள் ஏற்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் சுகாதார அமைச்சும் சுகாதார வழிகாட்டல்களை சரியான முறையில் பின்பற்ற தவறும்பட்சத்தில கொவிட் 19 மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பயிற்சிக்காக ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆறு மாத காலத்துக்குள் நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான மகஜரில் கையொப்பமிட்டு, போராட்டத்தை வெற்றிகொள்ள ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பளம் கையில் கிடைக்கும் நாளே சந்தோசமான நாள், அதை விடுத்து கடந்த நாட்களில் நடைபெற்ற கேக் வெட்டுதல், பால் சோறு ஆக்குதல் என்பன சந்தோசமாக அமையாது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை (15) முதல் ஆரம்பமாக உள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படாவிடின் சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்து தெரிவித்துள்ளார்.