2025ஆம் ஆண்டுக்கு முன்னர் குழந்தைத் தொழிலை உலகில் நிறுத்தும் பணியில் தாங்களும் உறுதியுடன் பங்கேற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உலகத்தைப் போன்று, நமது நாட்டிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாவதற்கு தாக்கம் செலுத்தும், சமூகக் காரணி அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலைமையாகும். அந்த பின்தங்கிய பொருளாதார நிலைமைக்கு பதில் வழங்காது, சட்டத்தினால் மாத்திரம் சிறுவர் தொழிலாளர்கள் உருவாவதை தடுக்க முடியாது என தொழி;ல் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தற்போது விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் அவரை அப்பதவியில் இருந்து நீக்குமாறு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் MN-04 சம்பள தரத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான தகமையில் வயதெல்லையை குறிப்பிட வேண்டாம் என்று கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியாராச்சியின் கையெழுத்துடன் கல்வியமைச்சின் செயலாளருக்கு நேற்று (10) இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த மார்ச் மாதம் 3ம் திகதி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நீங்கள் உட்பட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் MN-04 சம்பள தரத்தில் பணியாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கமைய சேவையில் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன் பின்னர் கடிதம் மூலமாகவும் தெரியப்படுத்தினோம் என்பதை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேற்படி விடயத்துக்கமைய, பொது சேவைகள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு பின்னர் வர்த்தமானி அறிவித்தல் வௌியிட தயாராகி வருவதாகவும் அவ்வர்த்தமானி அறிவித்தலுக்கமைய விண்ணப்பிப்பதற்கான ஆகக்கூடிய வயதெல்லை 45 என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு வகைப்படுத்தப்படுமாயின் பாடசாலைகளில் பணியாற்றும் பட்டதாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அதற்கமைய, குறித்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தற்போது பொது சேவையில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் என்றவகையில் அரசின் ஏனைய மூடிய பரீட்சையில் வயதெல்லை கவனத்திற்கொள்ளப்படாதது என்ற நிபந்தனையை வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கி அனைவருக்கும் நியாயமான வாய்ப்பை வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இக்கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கான நேரம், திகதியை ஒதுக்கித் தருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
60,000 தொழில்வாய்ப்பில் எஞ்சியுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் உடனடியாக வேலைக்கு அமர்த்துமாறு நிகழ்நிலை போராட்டம் (Online Protest !) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த இருவேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், குறித்த இரு வழக்குகளும் எதிர்வரும் 15ம் திகதி விசாரணைகளிற்காக தவணையிடப்பட்டுள்ளது.
2018 / 2019 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கான நியமங்களை இதுவரையில் பெற்றிராத, பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்காக செலுத்தப்படும் 20,000 ரூபா மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் அரச சேவைகள் அமைச்சு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர், நபர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் அமுலாகியுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.