சிறுவர் தொழிலாளர்கள் உருவாக தாக்கம் செலுத்தும் சமூகக் காரணிகளை ஒழிக்க வேண்டும்

சிறுவர் தொழிலாளர்கள் உருவாக தாக்கம் செலுத்தும் சமூகக் காரணிகளை ஒழிக்க வேண்டும்

உலகத்தைப் போன்று, நமது நாட்டிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாவதற்கு தாக்கம் செலுத்தும், சமூகக் காரணி அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலைமையாகும். அந்த பின்தங்கிய பொருளாதார நிலைமைக்கு பதில் வழங்காது, சட்டத்தினால் மாத்திரம் சிறுவர் தொழிலாளர்கள் உருவாவதை தடுக்க முடியாது என தொழி;ல் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளான இன்றைய (12) தினத்தை முன்னிட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற இணையவழி நிகழ்நிலை கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு தொடர்பில், இலங்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு விதிமுறைகளை சிறுவர் மற்றும் தாய்மார் மரண விகிதாசாரம் அதேபோன்று உண்மை தன்மை தொடர்பான சர்வதேச விகிதாசாரம் முதலான எல்லாவற்றிலும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலும் மிக முன்னிலையில் உள்ள நாடாகும். விசேடமாக இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் பின்பற்றப்படுகின்ற கொள்கையின்மூலம் இலங்கை இது தொடர்பில் முன்னோக்கி செல்லும் நாடாக சுட்டிக்காட்டுவதற் பல தரவுகள் எம்மிடம் உள்ளன. இலங்கையின் சிறுவர் சனத்தொகைக்கு அமைய சிறுவர் தொழிலில் ஈடுபடும் நிலைமையானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். இது எங்களுக்கு உள்ள சாதகமான காரணமாகும். இந்த நிலையில் சிறுவர் தொழிலாளர்களை இலங்கையில் இருந்து முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதற்காக வருடாந்தம் ஜூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில், இம்முறை சற்று வித்தியாசமாக சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்கும் வருடமாக இந்த வருடத்தை நாங்கள் பெயரிட்டுள்ளோம்.

nimal-child-1024x387.jpg

கொரோனா பரவல் இல்லாதிருந்தால் இந்த ஆண்டில் மிகவும் செயல்திறன் மிக்க வேலை திட்டங்களை நாங்கள் ஈடுபட்டிருக்கலாம். கொரோனா பரவல் நிலையினால் தற்போது சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான நிலைமையை ஆராய்ந்து பார்ப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாக உள்ளது. தொழில் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை ஆராய்ந்து பார்ப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரம் கொரோனா காரணமாக பொருளாதார நிலைமைகளுக்குக் பொதுமக்கள் சிக்கியுள்ளனர். இதுபோன்ற சமூக காரணங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த சமூகக் காரணிகளுக்கு உரிய தீர்வுகளை வழங்காமல், சட்டத்தினால் மாத்திரம் நாங்கள் இந்த விடயத்தை செயல்படுத்த முடியாது.

எனினும், நாங்கள் சட்டக் கட்டமைப்பை தயாரித்துள்ளோம். சிறுவர்களை தொழிலாளர்களை அமர்த்துவதற்கு ஆன வயதில்லை 14 இல் இருந்து 16 ஆக அதிகரித்திருக்கின்றோம். அதேநேரம் 16 வருடங்களுக்கு பிள்ளைகளுக்கு கட்டாயமாக கல்வி வழங்க வேண்டும் என்பதை நாங்கள் சட்டமாக்கியுள்ளோம். எனவே, சட்ட கட்டமைப்புக்குள் இதனை இல்லாது செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். எனினும் சிறுவர் தொழிலாளர்களை முழுமையாக இல்லாதொழிக்கும் பணிகளை சட்டத்தின் ஊடாக மாத்திரம் செய்ய முடியாது.

சில சந்தர்ப்பங்களில் தொலைதூரத்தில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏனைய சில தொழில்துறைகளில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவதாக எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவற்றை ஆராயவேண்டும். இவற்றுக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும். இவற்றையும் தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோன்று சிறுவர்களை தொழிலுக்கு ஈடுபடுத்துவதற்கு ஏதுவான பொருளாதார மற்றும் சமூக பின்னணி என்ன என்பதை முதலாவதாக நாங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். அதற்காக நான் அதற்காக நாங்கள் தீர்வை வழங்காவிட்டால் சட்டத்தை அமைப்பதன் ஊடாக மாத்திரம் அதன் பிரதிபலன் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பரந்த மனதுடன் பரந்தளவில் செயல்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகும்.
இதுதொடர்பில் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதற்கான அவசிய தன்மையை பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தல், விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை ஏற்படுத்துதல், கல்வியானது பிள்ளைகளின் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தி அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் முழுமையான பிரசாரம் மற்றும் அறிவையும் நாங்கள் வழங்க வேண்டும்.

அவ்வாறு இடம்பெற்றால் மாத்திரமே இந்த சமூகத்திலிருந்து சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை எங்களால் செய்ய முடியும். – என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image