வாராந்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் இறப்பு 28 வீதமாக அதிகரித்துள்ளது என்று விசேட வைத்திய நிபுணர்கள் அமைப்பு (Association of Medical Specialists) சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேகமாக தொற்றாளர் அதிகரித்து வருகின்றமை, சுகாதார வசதிகள் மற்றும் ஒட்சிசன் தேவைப்படும் எண்ணிக்கை அதிகரிப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடமாட்டத்தடையின் முக்கியத்துவம் குறித்தும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சினால் ஒரு தெளிவான மற்றும் உறுதியான தடுப்பூசி வழங்கல் கொள்கை வெளியிடப்பட வேண்டும். இது பொது மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தடுப்பூசி வழங்கும் பொறுப்பை சுகாதார சேவைகள் திணைக்களத்திடனம் வழங்குவதுடன் உரிய அதிகாரிகள் அதனை கடுமையான நிபந்தனைகளுடன் மேற்பார்வை செய்யப்படவேண்டும். ே தடுப்பூசி வழங்கல் கொள்கைகள் மீற யாருக்கும் அனுமதிக்கக்கூடாது.
தடையற்ற சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் அண்மைக்காலமாக தடுப்பூசி வழங்குதில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்யும் வகையில் அனைத்து சுகாதார முன்னணி ஊழியர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படவேண்டும்.
சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களின் கடுமையான பரிந்துரையின் பேரில் தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்த குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது எமது கருத்து என்றும் மருத்துவ நிபுணர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.