உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாள் - ஜனாதிபதியின் செய்தி

உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாள் - ஜனாதிபதியின் செய்தி

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் குழந்தைத் தொழிலை உலகில் நிறுத்தும் பணியில் தாங்களும் உறுதியுடன் பங்கேற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 
குழந்தைகளே எமது நாட்டினைத் தொடர்ந்து வளர்த்துச் செல்லப் போகின்ற சிற்பிகள்.
அவர்களுக்கான அடிப்படை என்பது கற்கைதான்.
 
குழந்தைப் பருவம் எனப்படுவது கற்பதற்கும், விளையாடுவதற்கும், அறிவதற்கும் - அவற்றின் மூலமாக, உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை விருத்தி செய்வதற்குமான பருவம்.
 
குழந்தைப் பருவம் எனப்படுவது, வாழ்க்கையை ஓட்டுவதற்காகத் தொழில் செய்யத் தொடங்கிவிடும் ஒரு பருவம் அல்ல.
நமது குழந்தைகள் தமது குழந்தைப் பருவத்தைக் குழந்தைப் பருவமாகவே வாழ்ந்து செப்பனிடப் பாதுகாப்பான வழியமைத்துக் கொடுக்க வேண்டியது - பெரியவர்களாகிய நமது பொறுப்பு ஆகும்.
 
அதனாலேயே - க. பொ.த. வரையிலான அடிப்படைக் கல்வி என்பது எமது நாட்டில் சிறுவர்களுக்குக் கட்டாயமானது ஆக்கப்பட்டுள்ளது.
 
இன்று குழந்தைத் தொழிலை ஒழிப்புக்கான உலக தினம் - World Day Against Child Labour!
“இத் தருணமே செயற்பட்டு குழந்தைத் தொழிலை ஒழிப்போம்” என்பதே இந்த ஆண்டுக்கான இந்த தனித்துவ நாளின் கருப்பொருள்.
 
சர்வதேச தொழிலாளர் அமைப்பு.(International Labour Organization) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund - UNICEF) ஆகிய நிறுவனங்களால் தொடங்கப்பட்ட - 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் குழந்தைத் தொழிலை உலகில் நிறுத்தும் பணியில் நாமும் உறுதியுடன் பங்கேற்றுள்ளோம்! - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
GR_new.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image