பட்டதாரி பயிலுநர்களின் மே - ஜுன் மாத கொடுப்பனவுகள் தொடர்பான அறிவித்தல்
2018 / 2019 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கான நியமங்களை இதுவரையில் பெற்றிராத, பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்காக செலுத்தப்படும் 20,000 ரூபா மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் அரச சேவைகள் அமைச்சு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
20,000 ரூபா கொடுப்பனவு மே மற்றும் ஜூன் மாதங்களில் செலுத்தப்பட வேண்டியுள்ளதுடன், அதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சின் பிரதான நிதி உத்தியோகத்தரிடம் விசாரித்து அறிந்து கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு நேற்று முன்தினம் (10) அவர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.