இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை

இணையவழிக் கல்வி வழிகாட்டல் கோவை

நாடு தற்போது சந்தித்திருக்கும் மிக நெருக்கடியான கொவிட் தொற்றுநோய் பரவல் காலகட்டத்தில் - தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்புச் செயற்பாடாக, நாட்டின் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

ஆனாலும் - மாணவர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையினால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு, கற்றல் செயற்பாடுகள் பின்தங்கிவிட அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே - இணைய வழி மற்றும் நிகழ்நிலை தொழில்நுட்ப கல்விச் செயற்பாடுகள் எமது அனைத்து மாணவர்களுக்காகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் - இந்த இணைய வழி கல்வி செயற்பாடுகள், உரிய, பொருத்தமான, வழியில் முன்னெடுக்கப்பட வேண்டியது - மாணவர்களினது மட்டுமன்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உள மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.

அதன் காரணமாகவே - சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய துறைசார் நிபுனர்களின் பங்களிப்புடன் - இணைய வழி மற்றும் நிகழ்நிலை கல்வி வழிகாட்டல் எகோவை ஒன்றினை எமது கல்வி அமைச்சு தயாரித்துள்ளது.

வழிகாட்டல் கோவை இந்த இணைப்பில்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image