ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்மீது தாக்குதல்

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்மீது தாக்குதல்

வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முருகனூர் பகுதியில் இன்று (12) காலை 7.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிதம்பரபுரம், ஆச்சிபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை நோக்கி 28 ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது, முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG_20210612_083422.jpg

கல்வீச்சு தாக்குதலையடுத்து பஸ் சாரதி பஸ்ஸை நிறுத்தியபோது, பஸ்ஸினுள் புகுந்த குறித்த சிலர், சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பஸ்ஸின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழியர்கள் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.

IMG_20210612_083433.jpg

ஆடைத்தொழிற்சாலையினால் கொரோனா தொற்று பரவுவதாக வடமாகாணத்தில் பல பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image