வாராந்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் இறப்பு 28 வீதமாக அதிகரித்துள்ளது என்று விசேட வைத்திய நிபுணர்கள் அமைப்பு (Association of Medical Specialists) சுட்டிக்காட்டியுள்ளது.
All Stories
நாடு தற்போது சந்தித்திருக்கும் மிக நெருக்கடியான கொவிட் தொற்றுநோய் பரவல் காலகட்டத்தில் - தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்புச் செயற்பாடாக, நாட்டின் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று (09) அலரி மாளிகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சிக்கு ஆலோசனை வழங்கினார்.
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம் எதிர்வரும் (ஜூன் மாதம்) 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடத்திற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளை உடைய கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு சலுகை வழங்கியமை தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ராநந்தவிற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் இன்று (09) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் உரிமையாளர் இல்லாத கணக்குகள், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு வழிகளில் நாட்டிற்கும், மக்களுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை வேண்டுமென்றே உருவாக்கும் நபர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (8) தெரிவித்தார்.
தாதியர் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று (9) புதன்கிழமை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
ஓய்வூதியம் பெறுவோரின் நலன் கருதி இம் மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை எதிர்வரும் 10ஆம் திகதி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துளளார்.
காலி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் பிராந்திய பிரதானி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடமையில் ஈடுபடாத கிராமசேவையாளர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.